Saturday, 24 September 2011

மரபுசாரா எரிசக்தி ஒரு பார்வை..


கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கினால் பல வேலைவாய்ப்புகள் உருவாகும் என பலர் இன்றளவும் கருதுகிறார்கள்.அவ்வாறு செயல்படத் தொடங்கினால் சில நூறு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகலாம்.அதனை பார்ப்பனர்கள் அபகரித்துக் கொள்வார்கள்.அதே நேரத்தில் அரசு சாண எரிவாயு மற்றும் காட்டாமணக்கு;சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கக் கூடிய இயற்க்கை சக்திகளின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முற்பட்டால்;பல நேரடி வேலைவாய்ப்புகள்;பல்லாயிரக் கணக்கான மறைமுக வேலை வாய்ப்புகள் மற்றும் சுய தொழில் தொடங்கவும் வாய்ப்புக் கிட்டும்.உயிருக்கும் உத்திரவாதமிருக்கும்.

உதாரணமாக தற்பொழுது இருக்கும் மத்திய தொகுப்பு(Centralized grid )முறையை மாற்றினாலே மின் தட்டுப்பாடு என்பது வராது.பாபநாசம் நீர்மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரமானது கயத்தாறு மத்திய மின் தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து அனைத்து விநியோக மையங்களுக்கும் விநியோகிக்கப் படுகிறது.இதனால் பெரும்பாலான பொருட்செலவும் இழப்பும் ஏற்படுகிறது.

இலவச தொலைகாட்சிப் பெட்டி மற்றும் கிரைண்டர் கொடுக்கும் அரசானது வீட்டுக்கு ஒரு சூரிய ஒளிதகடினை(solar panel )கொடுத்தால் தங்கள் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தில் ஒருபகுதியை தாங்களே தயாரித்துக் கொள்ளலாம்.இதனால் மின் இழப்பு ஏற்படாது.உதிரியாக இருக்கும் மின்சாரத்தை அரசுக்கே விற்பனை செய்யலாம்.ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் தன்னுடையக் கட்டுப் பாட்டிலிருக்கும் தரிசு நிலங்களில் காட்டாமனக்கினை (jathroba curcas ) விதைத்து அதிலிருந்து வரும் உயிர் எரிபொருளின் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்;விவசாயிகள் தங்களின் வெளிப் பகுதிகளில் காட்டாமணக்கை விதைத்து கூட்டுறவு முறை மூலம் உயிர் எரிபொருள்(பயோ-டீசல்)தயாரித்து தங்கள் விவசாய வாகனங்களுக்கு பயன்படுத்தலாம்.பயோ-டீசல் தயாரித்தப் பின்னர் கிடைக்கும் காட்டாமணக்கு விதைக் கழிவுகளை தங்கள் விவசாய நிலத்தில் எருவாக இடலாம்.

இவ்வாறு சோலார் மற்றும் பயோ-டீசல் முறைக்கு மாறுவதன் மூலம் உலக வெப்பமயமாதலை தடுக்கலாம்.குறிப்பாக இந்தியாவின் கையிலிருப்பிலிருக்கும்  அந்நிய செலவாணியின்  பெரும் பகுதியினை இந்திய அரசு கச்சா என்னைக்கே செலவிடுகிறது.அரசானது கடுமையான சட்ட திட்டங்களின் மூலம் மரபு சாரா மின் உற்பத்தி மற்றும் மரபு சாரா எரிபொருட்களை ஊக்குவித்தால் பெரும்பாலான அந்நிய செலவாணியை மிச்சப் படுத்தலாம்;பல வேலை வாய்ப்புகளையும் உருவாக்கலாம்.இந்தியாவின் குஜராத் மாநிலம் இன்று மின் உற்பத்தியில் இந்தியாவில் முதல் மாநிலமாகவும்;தொழில் திறனிலும் முதல் மாநிலமாகவும் இருக்கிறது.அம்மாநிலத்தில் ஒரு அணு மின் நிலையம் கூட இல்லை.அம்மாநில அரசின் சிறந்த நிர்வாகத் திறமையால் இன்று அங்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தியினை ஊக்குவித்து இந்தியாவின் மின்சாரம் தட்டுப்பாடில்லாத மாநிலம் என்ற ஒரு நிலையினை உருவாக்கிவிட்டார்கள்.

இவ்வாறான திட்டங்களை செயல் படுத்துவதற்கு முதலீடு அதிகமாகத்தான் இருக்கும் ஆனால் உற்பத்தி செலவு மிகமிகக் குறைவு.கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க அரசு பதினைந்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.அதனை இயக்க தேவைப் படும் செறிவூட்டப் பட்ட யுரேனியத்துக்காக ஆண்டுக்கு நானூறு கோடி ரூபாய் செலவிடப் படவேண்டும் .அதே திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்க ஐம்பதாயிரம் கோடி முதலீடாக இருந்தாலும் இயக்க தேவைப்படும் எரிபொருளுக்காக ஒரு பைசா கூட செலவிடப் படவேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையங்களை அமைக்கும் பொழுது அது சார்ந்த உபகரணங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருமளவில் உருவாகும்.இதனால் பல மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும்.

அதனைப் போல் உள்ளாட்சி அமைப்புகள் ஒரு சாண எரிவாயு உருவாக்கும் நிலையத்தினை உருவாக்கி அதிலிருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவை  தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு விநியோகிப்பதன் மூலம் தன்னுடைய நிதி ஆதாரத்தினை பெருக்கிக் கொள்ளலாம்.இவாறு திட்டமிட்டு செயல்படும் பொழுது கால்நடைகளின் எண்ணிக்கைப் பெருகும்.கால்நடைகளின் எண்ணிக்கைப் பெருகுவதன் மூலம் பால் உற்பத்திப் பெருகும்.பால் உற்பத்திப் பெருகும் பொழுது பால் சார்ந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனகள் பெருகும்.இதனால் பல்லாயிரக் கணக்கான மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும்.இயற்கைக்கு எவ்வித இடையூறுமில்லாமல்.

ஐரோப்பாவிலுள்ள சிறிய நாடான டென்மார்க் உலகமே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் போதும் பால் ;மற்றும் காற்றாலை மின் உற்பத்தியின் மூலம் தன்னுடையப் பொருளாதாரத்தை சரிய விடாமல் தற்காத்துக் கொண்டுவிட்டது..

No comments:

Post a Comment